இரா .மணிவாசகம் . கோவை . 22.7.1984. அன்று எழுதிய கட்டுரை . இந்த கட்டுரையின் ஆசிரியராகிய பொறியாளர் மணிவாசகம் அவர்களுக்கு நன்றி .
கொங்கு நாட்டில் பிற சமூகத்தவர்களிடையே குடிப்பெயர் அல்லது குலப்பெயர்கள் நடைமுறையில் உள்ளதுபோல் முத்தரையர் இனத்தவரிடமும் உள்ளன . அக்குலப் பெயர்களை கொண்டு கொள்வினை கொடுப்புவினை போன்ற திருமண உறவுகள் நடை பெறுகின்றன . ஒவ்வொரு குலத்தாரும் வெவ்வேறு குல தெய்வங்களை வழிபடுகின்றனர் . அத்தெய்வங்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களே . தெய்வ வழிபாட்டு இடங்கள் மனித நடமாட்டம் குறைந்த இடங்களிலே இருந்து வந்திருக்கின்றன . வழிபாட்டின் போது ஆடு ,கோழி ,ஆகியவற்றைப் பலியிட்டு ,கள் ,சாராயம் வைத்தும் வழிபடுகின்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது .கோவை , பெரியார் (ஈரோடு ),நீலகிரி மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள சில குடிபெயர்கள் அல்லது குலப்பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
சின்னக் கருப்பன் கூட்டம்
பெரிய கருப்பன் கூட்டம்
வடுகன் கூட்டம்
செட்டீ கூட்டம்
பெரிய குலத்தான் கூட்டம்
ஆண்டி கூட்டம்
கீறி கூட்டம்
திருவேட்டை கூட்டம்
காடை கூட்டம்
காத்தவராயன் கூட்டம்
கவுண்டன் கூட்டம்
வேட்டை கூட்டம்
கொண்டம் பட்டியான் கூட்டம்
தாசன் கூட்டம்
காரகமாடி கூட்டம்
குலங்காணியார் கூட்டம் (குலமூட்டி கூட்டம் )
பெருஞ்சாலையார் கூட்டம் (பெருஞ்சாலி கூட்டம் )
மாயன் கூட்டம்
தேவங் கூட்டம்
பரதேசி கூட்டம்
வில்வித்திறன் கூட்டம்
மூவாங் கூட்டம்
குளங்களைக் கூட்டம் என வழங்குவது கொங்கு நாட்டு மரபு .எடுத்துக்காட்டாக வில்வித்திறன் கூட்டம் என வழங்குவர் .அவர்கள் அய்யா நாச்சி ,அழகு நாச்சி ஆகிய தெய்வங்களை வழிபடுகின்றனர் .ஒரு கூட்டத்தார் பிறிதொரு கூட்டத்திலே மனவினைத் தொடர்பு கொள்வர் .
கருப்பராயன்
நாகர்
கன்னிமார்
வேட்டைக்காரன்
வீரமாத்தி
நடுக்காட்டு ஐயன்
அழகு நாச்சி
பகவதியம்மன்
கொங்கலம்மன்
வெள்ளையம்மாள்
சோலையம்மாள்
அரசனார்
கொங்கு நாட்டு முத்தரையர்கள் ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் தங்கள் குல தெய்வங்களின் பெயர்களை இட்டு வழங்கி வருகின்றனர் . ஆண்களில் அரசன் ,நாகன் ,நாசி ,அழகன் ,கருப்பன் , அய்யாவு போன்ற பெயர்களும் பெண்களில் கன்னியம்மாள் ,அழகால் ,நாச்சாள் ,வீரால் ,கருப்பாய் ,அரசால் போன்ற பெயர்களும் மிகுதியாக வழங்கப்படுகின்றன .

No comments:
Post a Comment